< Back
மாநில செய்திகள்
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்..! 30 அடிக்கு மேல் எழுந்த கடல் அலைகள்..!
மாநில செய்திகள்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்..! 30 அடிக்கு மேல் எழுந்த கடல் அலைகள்..!

தினத்தந்தி
|
12 Jun 2022 7:16 AM IST

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தை பார்வையிடச் செல்ல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதுபோல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்புகளுக்கு அருகே நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.


மேலும் செய்திகள்