< Back
மாநில செய்திகள்
உள்ளூர்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கேட்டு தனியார் கம்பெனியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சென்னை
மாநில செய்திகள்

உள்ளூர்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கேட்டு தனியார் கம்பெனியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தினத்தந்தி
|
13 Aug 2022 11:14 AM IST

உள்ளூர்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கேட்டு பொதுமக்கள் தனியார் கம்பெனியை முற்றுகையிட்டனர்.

அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம், மங்களாபுரம் மற்றும் கச்சினங்குப்பம் ஆகிய ஊர்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறார்கள். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநில மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் பகுதியை சேர்ந்த தகுதியான மக்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது தொழில் தொடங்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், அம்பத்தூரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக கம்பெனி நிர்வாகத்தினர் முறையான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளூர்காரர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் தரவில்லை என்றால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மொத்தமாக திரண்டு முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். தனியார் கம்பெனி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்