< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
|26 Oct 2023 12:41 AM IST
திசையன்விளையில் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் தசரா திருவிழாவையொட்டி ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு நடன நிகழ்ச்சி நடந்தது. தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் அங்கு சென்றனர். ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி இல்லை எனக்கூறி எடுத்து சென்றனர். இதனால் கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதை தொடர்ந்து கோவில் தர்மகர்த்தாவிடம் போலீசார் ஒலிபெருக்கியை ஒப்படைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.