< Back
தமிழக செய்திகள்

பெரம்பலூர்
தமிழக செய்திகள்
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது

23 Jun 2022 1:16 AM IST
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியிட்ட நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் முதலாமாண்டு சேர்க்கைக்கு மாணவ-மாணவிகளிடம் விண்ணப்பித்தனர்.