< Back
மாநில செய்திகள்
சின்ன வெங்காயம் விலை கிடு, கிடு உயர்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சின்ன வெங்காயம் விலை கிடு, கிடு உயர்வு

தினத்தந்தி
|
7 Jun 2023 10:31 PM IST

உப்புக்கோட்டை பகுதியில் சின்னவெங்காயம் விலை கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியான குச்சனூர், கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெங்காயம், கொத்தமல்லி, கத்தரிக்காய், பீட்ரூட், காலிபிளவர், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வருடத்தின் அனைத்து பருவங்களிலும் இங்கு காய்கறிகள் பயிரிடப்படுவது கூடுதல் சிறப்பு ஆகும்.

உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் அதிக அளவு விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டனர். தற்போது வெங்காய அறுவடை பணி அங்கு மும்மூரமாக நடந்து வருகிறது. போதிய அளவு தண்ணீர் பாய்ச்சியதாலும், நோய் தாக்குதல் இல்லாததாலும் வெங்காயம் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை, சாலையோரத்தில் கொட்டி தரம் பிரித்து விற்பனைக்காக வெளியூர்களுக்கும், உள்ளூர் சந்தைகளுக்கும் விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். இதேபோல் வெங்காயத்தின் விலையும் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நடவு செய்த 70 முதல் 80 நாட்களில் வெங்காயம் விளைச்சல் அடைந்து விடும். விதை வெங்காயம், உரம், மருந்து, தண்ணீர் பாய்ச்சுவது என ஒரு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. தற்போது வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாவதால் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றார்.

மேலும் செய்திகள்