< Back
மாநில செய்திகள்
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சிறிய வெங்காயத்தின் விலை குறைந்தது
தென்காசி
மாநில செய்திகள்

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சிறிய வெங்காயத்தின் விலை குறைந்தது

தினத்தந்தி
|
29 July 2023 12:15 AM IST

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சிறிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சிறிய வெங்காயத்தின் விலை குறைந்தது.

பாவூர்சத்திரம்:

தமிழகத்தில் சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி உள்ளிட்டவற்றின் விலையானது தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்ததால் குடும்ப பெண்கள் பெரிதும் சிரமமடைந்து வந்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் 135 ரூபாய் முதல் 160 வரை விற்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான மேலப்பாவூர், கீழப்பாவூர், கழுநீர்குளம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர், சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு சிறிய வெங்காயத்தின் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் சுமார் ஒரு மாத கால இடைவெளிக்கு பின்னர் தற்போது ஒரு கிலோ சிறிய வெங்காயம் 60 ரூபாயாக குறைந்துள்ளது. விவசாயிகள் அதிக அளவில் சிறிய வெங்காய அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருவதால் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்