சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
|கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
சென்னை,
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்தது. இந்த நிலையில் இன்று மேலும் தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.