< Back
மாநில செய்திகள்
குமரி, தேனி, மதுரையில் மல்லிகை பூவின் விலை கிடுகிடு உயர்வு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

குமரி, தேனி, மதுரையில் மல்லிகை பூவின் விலை கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
3 Dec 2022 11:09 AM IST

நேற்று ரூ.1500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.3500ஆக விலை உயர்ந்துள்ளது.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.1500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.3500ஆக விலை உயர்ந்துள்ளது.

அதேபோல தேனியில் மல்லிகைப்பூ அதிகபட்சனாக கிலோவுக்கு ரூ.5,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரையிலும் விலை அதிகரித்து கிலோவுக்கு ரூ.3,000க்கு மல்லிகைப்பூ விற்பனையாகிறது.

இந்த திடீர் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்