< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
4 Oct 2022 12:14 AM IST

பரமத்திவேலூரில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

பரமத்திவேலூர்

விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை‌ கிடுகிடுவென உயர்ந்துள்ளது இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

குண்டுமல்லி கிலோ ரூ.1,000

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.200- க்கும், அரளி கிலோ ரூ.250-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

இந்திநிலையில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1000-க்கும், சம்பங்கி கிலோ ரூ350-க்கும், அரளி கிலோ ரூ.450-க்கும், ரோஜா கிலோ ரூ.350-முல்லைப் பூ கிலோ ரூ.1,000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும் ஏலம் போனது.

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை‌ உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்