< Back
மாநில செய்திகள்
பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பூக்கள் விலை 'கிடுகிடு' என உயர்ந்துள்ளது

தினத்தந்தி
|
10 Jun 2022 2:27 AM IST

நெல்லையில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது

நெல்லை:

வைகாசி மாதத்தில் உள்ள முக்கிய முகூர்த்த நாளாக நேற்றும், இன்றும் (வெள்ளிக்கிழமை) உள்ளது. மேலும் இன்று வைகாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் பூக்களின் விலை 'கிடுகிடு' என உயர்ந்துள்ளது. கடந்த 7-ந் தேதி நெல்லையில் ஒரு கிலோ மல்லிகை, பிச்சி பூ ரூ.400-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் மல்லிகை, பிச்சி பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.1300-க்கு விற்பனையானது.

இதேபோல் முதல் ரக ரோஜா பூவான தாஜ்மஹால் ரோஸ் கிலோ ரூ.350-க்கும், சாதா ரோஸ் ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகம் என்பதால் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்