< Back
மாநில செய்திகள்
முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு..!
மாநில செய்திகள்

முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு..!

தினத்தந்தி
|
24 Dec 2023 6:55 PM IST

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை அதிகரித்து வந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில், புதிய உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும், வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்