< Back
மாநில செய்திகள்
பெரிய வெங்காயம் விலை கடும் சரிவு
திருச்சி
மாநில செய்திகள்

பெரிய வெங்காயம் விலை கடும் சரிவு

தினத்தந்தி
|
9 March 2023 1:36 AM IST

திருச்சியில் வெங்காய மண்டிக்கு வரத்து அதிகரித்ததால் பெரிய வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.5 முதல் ரூ.18 வரை விற்கப்படுகிறது.

திருச்சியில் வெங்காய மண்டிக்கு வரத்து அதிகரித்ததால் பெரிய வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.5 முதல் ரூ.18 வரை விற்கப்படுகிறது.

வெங்காயம் விலை சரிவு

திருச்சி மாவட்டத்துக்கு கரூர், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 100 டன் சின்னவெங்காயம் வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மைசூரு, குண்டல்வேர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 50 டன் சின்ன வெங்காயம் வருகிறது.

இதேபோல் பெரிய வெங்காயம் 500 டன் வரத்து உள்ளது. திருச்சி வெங்காய மண்டியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் வியாபாரிகள் வெங்காயம் வாங்கி செல்கிறார்கள். இந்தநிலையில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் தற்போது பெரிய வெங்காயம் விலை கடுமையாக சரிந்து தரத்துக்கு ஏற்றவாறு கிலோ ரூ.5 முதல் ரூ.18 வரை விற்பனையாகிறது. சின்னவெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது.

வரத்து அதிகரிப்பு

இது குறித்து திருச்சி வெங்காய கமிஷன் மண்டி செயலாளர் தங்கராஜ் கூறுகையில், இதுவரை இல்லாத வகையில் வெங்காயம் விலை கடுமையாக சரிந்துள்ளது. வரத்து அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். திருச்சி மாவட்டத்துக்கு தினமும் 500 டன் வரை வெங்காயம் வரத்துள்ளது. இதில் 200 டன் அளவுக்கு தான் விற்பனையாகிறது. 300 டன் வரை தேக்கம் அடைகிறது.

இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. இனி 2 மாதத்துக்கு விலை ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றார்.

மேலும் செய்திகள்