< Back
மாநில செய்திகள்
புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது
நாமக்கல்
மாநில செய்திகள்

புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது

தினத்தந்தி
|
23 Nov 2022 12:51 AM IST

புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தை நேற்று காலை வழக்கமாக கூடியது. அப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் மாடுகளை வாங்க குவிந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த வாரம் ரூ.18 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பசுமாடு இந்த வாரம் ரூ.17 ஆயிரத்திற்கும், ரூ.27 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட எருமை மாடு ரூ.26 ஆயிரத்திற்கும் விற்பனை நடைபெற்றது. கன்றுக்குட்டி ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.9 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. மேலும் கேரள மாநிலத்தில் தற்போது மீன்பிடிகாலம் தொடர்வதாலும் அங்கு 2 கிலோ மீன் ரூ.100-க்கு விற்கப்படுவதால் அந்த மாநிலத்தில் மாட்டு இறைச்சி நுகர்வோரின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் இங்குள்ள புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது என்று வியாபாரிகள் கவலையுடன் கூறினர். நேற்று ரூ.2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்