< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணி மனைவியை சுவற்றில் தள்ளிவிட்டு கொலை... குடும்பத்தகராறில் கணவன் வெறிச்செயல்
மாநில செய்திகள்

கர்ப்பிணி மனைவியை சுவற்றில் தள்ளிவிட்டு கொலை... குடும்பத்தகராறில் கணவன் வெறிச்செயல்

தினத்தந்தி
|
31 Dec 2023 7:27 PM IST

மதுபோதையில் ஹரிஹரன் நான்கு மாத கர்ப்பிணி மனைவியான லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடும்பத்தகராறில் கர்ப்பிணி மனைவியை சுவற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். ஊனாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனரான ஹரிஹரன் என்பவர் மதுபோதையில் நான்கு மாத கர்ப்பிணி மனைவியான லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது லட்சுமியை பலமாக தாக்கி சுவற்றில் தள்ளிவிட்டார். இதில் நிலைகுலைந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் ஹரிஹரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்