< Back
மாநில செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
27 Sept 2022 3:00 PM IST

திருத்தணி துணை மின்நிலைய வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பழைய சென்னை சாலையில் இயங்கி வரும் திருத்தணி துணை மின்நிலைய வளாகத்தில் திருத்தணி நகரம் மற்றும் ஊரக மின்வாரிய அலுவலகங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட மின்ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, மின்சார மசோதாவை திரும்பப் பெறுதல், மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகள் வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து உள்ளிப்பு போராட்டம் நடத்தினர். பெரும்பாலான ஊழியர்கள் காஞ்சீபுரத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றால், திருத்தணி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மின்கட்டணம் செலுத்த வந்தவர்கள் மற்றும் மின்வினியோகம் குறித்தான புகார்கள் தெரிவிக்க வந்த நுகர்வோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்