< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
போலீஸ்காரர் பணி நீக்கம்
|5 Aug 2023 12:15 AM IST
லஞ்சம் வாங்கிய புகாரில் போலீஸ்காரர் பணி நீக்கம் செய்யப்பட்டார்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் கார்மேக கண்ணன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது ஒரு வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முத்துக்குமார் என்பவர், தங்கள் தரப்பிடம் இருந்து கார்மேக கண்ணன் பணம் பெற்றது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் செய்தார். அது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் அவர் பணம் பெற்றது தெரியவந்தது. இது குறித்து துறைவாரி நடவடிக்கைக்கு அவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் டி.ஐ.ஜி. இது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் கார்மேக கண்ணனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.