< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
விபத்தில் பலியான மூதாட்டி உடலை அடக்கம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
|9 May 2023 12:15 AM IST
புளியங்குடி அருகே விபத்தில் பலியான மூதாட்டி உடலை முஸ்லிம் இளைஞர்களின் உதவியுடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடக்கம் செய்தார்.
கடையநல்லூர்:
புளியங்குடி மின்வாரியத்திற்கு அருகே தினசரி எலுமிச்சை மார்க்கெட் முன்பு கடந்த மாதம் 28-ந் தேதி அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க வயதான பெண் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் இறந்தார். இதுபற்றி சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஆனாலும் இதுவரை யாரும் வராததால் மூதாட்டியின் உடலை முஸ்லிம் இளைஞர்கள் உதவியுடன் சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி இந்து முறைப்படி அடக்கம் செய்தார்.