< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தப்பி செல்ல முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்..!
|12 Oct 2023 8:27 AM IST
செங்கல்பட்டில் தப்பிச் செல்ல முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சென்னை,
செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் ரவுடி தணிகா என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
இதில் ரவுடிக்கு கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த ரவுடி தணிகா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் பெரியபாளையத்தை சேர்ந்த தணிகா (எ) தணிகாசலம் மீது கொலை, கொள்ளை என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.