< Back
மாநில செய்திகள்
வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்

தினத்தந்தி
|
2 May 2023 2:55 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் மர்ம நபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சேகர் என்பவருக்கு சொந்தமான இடத்திலிருந்த வைக்கோல் போரில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்த நிலையில் பதுக்கியதை கண்டெடுத்தனர். அதனை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, கிருஷ்ணசமுத்திரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 27) என்பவருடையது என தெரிந்தது. இதுகுறித்து தலைமறைவான வெங்கடேசனை போலீசார் தேடுகிறார்கள். வைக்கோல் போரில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்