< Back
மாநில செய்திகள்
திருட்டுப்போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
திருச்சி
மாநில செய்திகள்

திருட்டுப்போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

தினத்தந்தி
|
16 Aug 2023 3:15 AM IST

திருட்டுப்போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

முசிறி:

முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் செல்போன்கள் திருட்டு போனதாக முசிறி போலீஸ் நிலையத்தில் செல்போன் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து முசிறி கோட்ட துணை சூப்பிரண்டு யாஸ்மின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் முசிறி போலீசார் விசாரணை நடத்தி, திருட்டுப்போன 22 செல்போன்களை மீட்டனர். இதையடுத்து அந்த செல்போன்களை உரியவர்களிடம் துணை சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்