< Back
மாநில செய்திகள்
பெண்ணை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பெண்ணை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

தினத்தந்தி
|
29 Jun 2023 2:38 PM IST

பள்ளிப்பட்டு தாலுகா அருகே பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் சகஸ்ர பத்மாபுரம் காலனியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மனைவி மரியாள் (வயது 42). நேற்று மரியாள் தனது வீட்டு அருகே தனது மகளுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, குமார், சரவணன், மல்லிகா ஆகிய 4 பேர் அவர்களை அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

மரியாள் இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மறியாள், அவளது மகளையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்த 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்