< Back
மாநில செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டர் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது
திருச்சி
மாநில செய்திகள்

போலீஸ் இன்ஸ்பெக்டர் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது

தினத்தந்தி
|
6 Jan 2023 1:57 AM IST

போலீஸ் இன்ஸ்பெக்டர் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது,

செம்பட்டு:

டெல்லியில் திகார் சிறையில் உள்ள 8-வது பெட்டாலியனில் தமிழக காவல்துறையின் சார்பில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் லாரன்ஸ்(வயது 53) கடந்த 3 ஆண்டுகளாக திகார் சிறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜூலியஸ்(45) என்ற மனைவியும், தமன்னா ஏஞ்சலின்(16) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக பீட்டர் லாரன்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் அவரது உடலை காவல்துறை சார்பில் அதிகாரிகள் பெற்று, அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரது உடல், அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்