< Back
மாநில செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

தினத்தந்தி
|
6 Aug 2023 12:15 AM IST

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சண்முகநாதபுரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 33). இவர் மீது 16 வயது சிறுமியை கடத்தி சென்றதாக கடந்த 2019-ம் ஆண்டு சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த பாலமுருகன் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார். மேலும் அவரை வருகிற 23-ந் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். பாலமுருகன் தற்போது திருப்பூர் மாவட்டம் நல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் செய்திகள்