< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
20 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
|23 Feb 2023 12:59 AM IST
20 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அப்போதைய பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் இருந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆஜராக சண்முகசுந்தரத்திற்கு 20 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாததால் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு நேற்று பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சண்முகசுந்தரம் தற்போது சேலம் மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.