< Back
மாநில செய்திகள்
சோதனை சாவடிகளில் போலீசார் திடீா் ஆய்வு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சோதனை சாவடிகளில் போலீசார் திடீா் ஆய்வு

தினத்தந்தி
|
23 July 2023 12:15 AM IST

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் போலீசார் திடீா் ஆய்வு

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்தும், குமரி மாவட்டம் வழியாகவும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வருவாய்த்துறை அலுவலா்கள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் பலனாக பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு மூடை மூடையாக அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிாிவு மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சிநேக பிரியா உத்தரவின்பேரில் குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிாிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு குமரி-கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

களியக்காவிளை மற்றும் படந்தாலுமூடு ஆகிய சோதனை சாவடிகளில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது சோதனை சாவடி வழியாக வந்த டெம்போக்கள், லாரிகள் மற்றும் வேன்களில் ரேஷன் அரிசி கொண்டு செல்லப்படுகிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு விடிய விடிய நடந்தது.

இதுபற்றி போலீசார் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க, ஒரு பகுதியாக சோதனை சாவடிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது நடந்த ஆய்வில் எந்த கடத்தலும் சிக்கவில்லை. இதே போல தொடர்ந்து கடத்தல் நடைபெறாமல் தடுக்க ஆய்வு நடத்தப்படும்" என்றனர்.

மேலும் செய்திகள்