பொன்னேரி அருகே போதையில் தாறுமாறாக லாரியை ஓட்டிய டிரைவரால் பரபரப்பு
|பொன்னேரி அருகே போதையில் தாறுமாறாக லாரி ஓட்டி வந்த ஆசாமியை போலீசார் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர்கூட்டு ரோடு சாலையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி நோக்கி தாறுமாறாக வேகமாக லாரி வருவதாக கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வேகமாக வந்த லாரியை பார்த்து நிறுத்த சொல்லி கை அசைத்தும் நிற்காமல் சிறிது தூரம் சென்று நின்றது. போலீசார் லாரியை விட்டு கீழே இறங்குமாறு வற்புறுத்தியும் ஓரமாக நிறுத்தச் சொல்லியும் கீழ இறங்காமல் பொன்னேரி தச்சூர் நெடுஞ்சாலை நடு ரோட்டில் டிரைவர் சீட்டை விட்டு இறங்காமல் அடம்பிடித்த டிரைவரை கிளீனர் சீட் வழியாக உள்ளே ஏறி குண்டு கட்டாக தூக்கி கீழே இறக்கினர்.
பின்னர் போலீசார் லாரியை ஓட்டி காவல் நிலையத்தில் கொண்டு சென்று டிரைவரை விசாரித்த போது பொன்னேரி பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பதும் சரியான நேரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்ததால் பெரும் விபத்து, உயிர் பலிகள் தவிர்க்கப்பட்டதாகவும் லாரியை பார்த்து பயந்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் தெரிவித்தனர்.
பின்னர் லாரி டிரைவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் பரிசோதித்து மது அருந்தியுள்ளதால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது