< Back
மாநில செய்திகள்
சென்னை: செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர கொள்ளையன் கைது - 47 செல்போன்கள் மீட்பு

சாய்குமார் 

சென்னை
மாநில செய்திகள்

சென்னை: செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர கொள்ளையன் கைது - 47 செல்போன்கள் மீட்பு

தினத்தந்தி
|
10 July 2022 9:53 PM IST

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆந்திர கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் பறிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவர் இந்த செல்போன் பறிப்பில் ஈடுபடுவது தெரிய வந்தது. அந்த கொள்ளையனை பிடிக்க எழும்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநில கொள்ளையன் சாய்குமார் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 47 செல்போன்கள் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்