< Back
மாநில செய்திகள்
பால் வியாபாரியிடம் வழிப்பறி: போலீஸ்காரர் மகன் உள்பட 2 பேர் கைது
மாநில செய்திகள்

பால் வியாபாரியிடம் வழிப்பறி: போலீஸ்காரர் மகன் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
9 July 2022 7:46 PM IST

பால் வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தூங்காவியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி வீடுகள் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் பால் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பொள்ளாச்சி அருகே சூலக்கல் தரைப்பாலம் பகுதியில் வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை மறித்தது. பின்னர் முத்துக்குமாரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் தப்பி சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை முத்துக்குமார் குறித்து வைத்துக் கொண்டார்.

இதை தொடர்ந்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்கள்.

இதற்கிடையில் முத்துக்குமார் கூறிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் வழிப்பறி செய்தது கிணத்துக்கடவு காந்தி நகரை சேர்ந்த இளங்கோவன் (வயது 28), அம்பேத்கார் வீதியை சேர்ந்த லோகநாதன் (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைதான இளங்கோவன் தந்தை வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்