< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
விஷம் குடித்த தொழிலாளி சாவு
|20 March 2023 12:30 AM IST
பழனி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து ெகாண்டார்.
பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த கோபால் மகன் பாண்டித்துரை (வயது 27). கூலித்தொழிலாளி. கடந்த 8-ந்தேதி இவர், குடும்ப பிரச்சினை காரணமாக விஷத்தை குடித்தார். இதில், மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாண்டித்துரை இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.