பெண்ணின் பாக்கெட்டில் இருந்த செல்போன்: நைசாக தூக்கிய திருடன்...!
|திருவண்ணாமலையில் இனிப்புக் கடையில் இளம்பெண்ணிடம் லாவகமாக செல்போனை கொள்ளையன் திருடிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இனிப்புக் கடையில் இளம்பெண்ணிடம் லாவகமாக கொள்ளையன் செல்போனைத் திருடிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.
மேல்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்த திவ்யா, ஆரணி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இனிப்புக் கடையில் இனிப்பு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்றிருந்த டிப் டாப் ஆசாமி, சிசிடிவி கேமராவை ஓரக் கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு ஏதோ மேஜிக் செய்யப்போவது போல் கைகளை பைக்கு அடியில் மறைத்து வைத்துக் கொண்டு, திவ்யாவின் சட்டைப் பையில் இருந்த செல்போனை நைசாக திருடினார்.
உண்மையாக மாயாஜாலம் செய்தது போல், கண்ணை மூடி திறப்பதற்குள் பாக்கெட்டில் இருந்த செல் களவு போயிருந்தது. சிறிது நேரம் கழித்து செல்போன் திருடு போனதை அறிந்த திவ்யா போலீசில் புகார் அளித்த நிலையில், கொள்ளையனின் கைவரிசை பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.