< Back
மாநில செய்திகள்
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அண்ணாமலை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மாநில செய்திகள்

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அண்ணாமலை தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தினத்தந்தி
|
8 Feb 2024 11:24 AM IST

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்