< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தையை கட்டையால் தாக்கிய நபர்கள் கைது
|31 Oct 2022 9:10 PM IST
திருத்துறைப்பூண்டி அருகே, மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அத்திமடை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள், பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசேகரன், மணிகண்டன், ஜீவா ஆகிய 3 பேர் மாணவியை கிண்டல் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக் கேட்ட மாணவியின் தந்தையை, கட்டையால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து புகாரின் பேரில், மணிகண்டனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.