< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்தவர் கைது
|19 May 2023 12:52 AM IST
திசையன்விளையில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை- நவ்வலடி ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாத்தான்குளம் தைக்கா தெருவை சேர்ந்த முகமது ஹமுல் என்பதும், விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 120 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்களும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.