< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்தவர் கைது
|27 Jan 2023 2:42 AM IST
பாளையங்கோட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொட்டாரம் குளத்துகரை அருகே மேலப்பாட்டம், முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 38) என்பவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.