< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் கைது

தினத்தந்தி
|
3 Sept 2023 12:15 AM IST

திருச்செந்தூர் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சூசைநகர் பகுதியில் உள்ள ஒடங்காட்டில் ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்து ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது ஆலந்தலை செபஸ்தியார் குருசடி தெற்கு தெருவை சேர்ந்த லயோ (வயது 33) என்பதும், அவர் வைத்திருந்த கட்டப்பையில் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் லயோவை கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்