< Back
மாநில செய்திகள்
வீடு புகுந்து திருட முயன்றவர் அடித்துக்கொலை
சென்னை
மாநில செய்திகள்

வீடு புகுந்து திருட முயன்றவர் அடித்துக்கொலை

தினத்தந்தி
|
10 Aug 2022 5:40 PM IST

வீடு புகுந்து திருட முயன்றவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கெட்னமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் வடுவம்மாள் (வயது 80). நேற்று முன்தினம் இரவு இவரது 2 மகள்களும் வீட்டின் உள்ளே படுத்து தூங்கினர். வரண்டாவில் உள்ள கட்டிலில் வடுவம்மாள் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அங்கு வந்த 3 பேர் வரண்டாவையொட்டிய கதவை அம்மிக்கல்லால் உடைத்து உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு கண் விழித்த வடுவம்மாளை கொள்ளையர்களில் ஒருவர் கழுத்தில் கையால் தாக்கினார்.

இதனால் வடுவம்மாள் கூச்சலிட்டார். சத்தம் ேகட்டு கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து 3 பேரில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மற்ற இருவரும் தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது பெயர் விவரம் தெரியவில்லை. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்