< Back
மாநில செய்திகள்
இரும்பு உருளைகளை திருடியவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

இரும்பு உருளைகளை திருடியவர் கைது

தினத்தந்தி
|
22 Sept 2023 1:55 AM IST

இரும்பு உருளைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

முசிறி:

முசிறியை அடுத்த சேருகுடியை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 50). இவர் தனது வீட்டிற்கு அருகில் 4 ஆண்டாக பூட்டிக்கிடந்த சிமெண்டு செங்கல் செய்யும் கிரஷரில் டிரைவராகவும், காவலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சூரம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சண்முகராஜ் (37), 5 இரும்பு உருைளகளை திருடியதாக தெரிகிறது. அவரை தியாகராஜனும், அவரது மனைவியும் பிடித்தனர். இது குறித்து தியாகராஜன் முசிறி போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து, சண்முகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்