< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
5 கிலோ தாமிர கம்பியை திருடியவர் கைது
|7 Jun 2023 1:31 AM IST
5 கிலோ தாமிர கம்பியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித தொழிற்சாலை உள்ளது. இங்கு கரூர் மாவட்டம், ஓந்தாம்பட்டியை சேர்ந்த மணிவேல்(வயது 24) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் ஆலையில் இருந்த 5 கிலோ தாமிர கம்பியை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிவேலை கைது செய்தனர்.