< Back
மாநில செய்திகள்
லாரியில் குண்டுக்கல் கடத்தியவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

லாரியில் குண்டுக்கல் கடத்தியவர் கைது

தினத்தந்தி
|
6 Aug 2023 12:36 AM IST

நெல்லை அருகே லாரியில் குண்டுக்கல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே பொன்னாக்குடி கால்வாய் பகுதியில் முன்னீர்பள்ளம் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அடைமிதிப்பான்குளத்தை சேர்ந்த ராபின் (வயது 35) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதிச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக குண்டு கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபினை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 25 டன் மதிப்பிலான குண்டு கற்களை டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்