< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வலைவீச்சு
|23 July 2024 6:45 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் பகத்சிங். இவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பகத்சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த பகத்சிங், தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.