< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது
|23 Oct 2023 12:00 AM IST
ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கே.புதுப்பட்டி அருகே ஒரு வீட்டில் சோதனை செய்தபோது 10 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. மாட்டு தீவனத்திற்காக ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாக்கியம் என்பவர் கைது செய்யப்பட்டார்.