< Back
மாநில செய்திகள்
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது

தினத்தந்தி
|
26 Jun 2023 1:37 AM IST

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக, வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 36) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 3¼ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்ய நெல்லை மகிளா கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. அதன்படி கல்லிடைக்குறிச்சி போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

மேலும் செய்திகள்