< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது
|9 Oct 2023 1:25 AM IST
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பத்தமடை பகுதியில் கடந்த 2016-ம் வருடம் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் பத்தமடை மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த பாலு (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் இவர் கோர்ட்டு விசாரணைக்கு கடந்த 1½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், சேரன்மாதேவி கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பாலுவை பத்தமடை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் நேற்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.