< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது
|5 Oct 2023 2:09 AM IST
நெல்லை அருகே கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே உள்ள கீழநத்தம் வடக்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தன ராஜ் (வயது 49). இவர் கடந்த 2018-ம் ஆண்டு கங்கைகொண்டான் பகுதியில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். இந்தநிலையில் கடந்த 10 மாதங்களாக அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையொட்டி கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்தநிலையில் கங்கைகொண்டான் போலீசார் நேற்று சந்தனராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.