< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
டீக்கடைக்கு வந்தவர் திடீர் சாவு
|21 Jun 2023 4:15 PM IST
திருப்பத்தூரில் டீக்கடைக்கு வந்தவர் திடீரென உயிரிழந்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வம் (58). இவர் தனது உறவினரான நாராயணன் மூலம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செல்வம் நேற்று அண்ணா சிலை அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நாராயணன் செல்வத்திடம் கடனை எப்போது கொடுப்பாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது செல்வத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர் கீழ விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வபிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.