< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

தினத்தந்தி
|
20 Oct 2023 11:33 PM IST

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணியிலிருந்து தேவிகாபுரத்துக்கு அரசு டவுன் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராமதாஸ் (வயது 42) பஸ்ஸை ஓட்டி சென்றார். ஆரணியை அடுத்த அரையாளம் அருகே பஸ் சென்றபோது 2 வாலிபர்கள் பஸ்சை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த இருவரும் கல்லால் பஸ் முன் பக்கம் கண்ணாடியை உடைத்துள்ளனர். இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் டிரைவர் ராமதாஸ் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து கண்ணாடியை உடைத்த விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான தச்சூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் (24) என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்