< Back
மாநில செய்திகள்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவருக்கு கத்திக்குத்து
கரூர்
மாநில செய்திகள்

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
21 Sept 2022 12:49 AM IST

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கரூர் தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 29). இவர், ராயனூர் பகுதிக்கு உட்பட்ட தில்லை நகரைச் சேர்ந்த வீரமலை(30) என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ரூ.ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து ரவிக்குமார் தான் கொடுத்த பணத்தை கேட்பதற்காக தில்லை நகரில் உள்ள வீரமலை வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது வீரமலை, ரவிக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கத்தியால் ரவிக்குமாரை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த ரவிக்குமார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து வீரமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்