< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது
|19 Oct 2023 1:57 AM IST
திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 16½ பவுன் நகை, ரூ.2½ லட்சம் மீட்கப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம்:-
சேலம் மாவட்டம் கருமந்துறை மணியார் குண்டம் பகுதியில் பழனியம்மாள் என்பவரின் வீட்டின் பூட்ைட உடைத்து பட்டப்பகலில் நகை, பணம் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் போலீசார் கருமந்துறை மேலவீதியை சேர்ந்த தனபால் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கருமந்துறை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 16 பவுன் நகை, ரூ.2½ லட்சம், ஒரு செல்போன் ஆகியவற்றை மீட்டனர். தனபால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.