திருவள்ளூர்
ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
|திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதிய மற்றும் ஓய்வு கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையீட்டு மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடி தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 30 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு பயனாளிக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த கூட்டத்தில் ஓய்வூதிய இயக்கக இயக்குனர் ஸ்ரீதர், துணை இயக்குனர் மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் வித்யா கவுரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சத்திய குமாரி மற்றும் ஓய்வூதியதாரர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.