கரூர்
குளித்தலை வழியாக இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலுக்கு மாலை அணிவித்து வரவேற்பு
|குளித்தலை வழியாக இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக குளித்தலை வழியாக இயக்கப்பட்ட பயணிகள் ரெயில்கள் உள்பட பல ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இயக்கப்படாத ெரயில்களை மீண்டும் இயக்கக்கோரி ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து குளித்தலை வழியாக கரூர், ஈரோடு மார்க்கமாக செல்லும் ரெயில் மற்றும் ஈரோட்டில் இருந்து கரூர், குளித்தலை வழியாக திருச்சி செல்லும் ரெயில் என 2 பயணிகள் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது. பல மாதங்களாக இயக்கப்படாமல் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்ட ரெயில்கள் குளித்தலை வழியாக சென்றபோது திம்மாச்சிபுரத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அந்த ரெயிலுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சார்பில் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.